பிபிஎல் 2023: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோ கிளார்க் 15 பந்தில் 12 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான தாமஸ் ரோஜர்ஸ் அதிரடியாக விளையாடி 33 பந்தில் 48 ரன்களை விளாசி 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
Trending
பின் ஹில்டன் கார்ட்ரைட் 31 பந்தில் 36 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். 28 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 2ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான ஃபினிஷிங்கால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 174 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் ஃபிலிப் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக விளையாடிஅரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய டேனியல் ஹியூக்ஸ் 28 ரன்கள், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் 23 ரன்கள், ஜோர்டான் சில்க் 15 ரன்களுக்கு ஆட்டமிழன்ந்து ஓரளவு பங்களிப்பு செய்தனர். ஆனால் மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடியய ஜேம்ஸ் வின்ஸ் 59 பந்தில் 91 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.
இதன்மூலம் 19.5 ஓவர்களில் சிட்னி சிக்சர்ஸ் அணி இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு உதவிய ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now