
பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பேர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியில் கேப்டன் மேடின்சன் ரன் ஏதுமின்றியும், மார்ட்டின் கப்தில் 6 ரன்களிலும், ஹேன்ஸ்கோம்ப் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய ஆரோன் ஃபிஞ்ச் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஃபிஞ்ச் அரைசதம் கடந்தார். அதன்பின் 48 பந்துகளில் 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 65 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தனர்.