Advertisement
Advertisement
Advertisement

பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!

ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 09, 2024 • 22:57 PM
பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்! (Image Source: Google)
Advertisement

பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு பென் மெக்டர்மோட் - கலெப் ஜெவெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக்டர்மோட் ஒருமுனையில் அதிரடியாக விளையாட, மறுபக்கம் கலெப் ஜெவெல் 5 ரன்களுக்கும், மெக்லிஸ்டர் ரைட் 11 ரன்களுக்கும், சாம் ஹைன் ரன்கள் ஏதுமின்றியும், கோரி ஆண்டர்சன் 3 ரன்களுக்கும், நிகில் சௌத்ரி ரன்கள் ஏதுமின்றியும், டிம் டேவிட் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Trending


அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்டர்மோட் அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக விளையாடிய கிறிஸ் ஜோர்டன் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெக்டர்மோட் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 95 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் - டி ஆர்சி ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் டி ஆர்சி ஷார்ட் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ ஷார்ட் 45  ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த கிறிஸ் லின் - அலெக்ஸ் கேரி இணையும் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்தனர்.

இதில் கிறிஸ் லின் 37 ரன்களையும், அலெக்ஸ் கேரி 36 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆடம் ஹோஸ் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய தாமஸ் கெல்லி - ஜேமி ஓவர்டன் இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement