
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹரிகேன்ஸ் அணிக்கு மேத்யூ வேட் - பென் மெக்டர்மோட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன, முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். பின் 50 ரன்களை எட்டிய மெக்டர்மோட் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ வேட் 63 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் டேனியல் லாரன்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.