-mdl.jpg)
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு தாமஸ் ரோஜர்ஸ் - டேனியல் லாரன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். அதிரடியாக தொடங்கிய இவர்களில் தாமஸ் ரோஜர்ஸ் 19 ரன்களிலும், டேனியல் லாரன்ஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 36 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வெப்ஸ்டரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த கேப்டன் மேக்ஸ்வெல் - ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 31 ரன்களில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டொய்னிஸ் 34 ரன்களையும், கார்ட்ரைட் 29 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.