-mdl.jpg)
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜோஷ் பிலிப் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேனியல் ஹூயுக்ஸ் 2 ரன்களிலும், கேப்டன் ஹென்றிக்ஸ் 5 ரன்களிலும், ஜோர்டன் சில்க் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் வின்ஸ் - ஜேக் எட்வர்ட்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 83 ரன்களில் வின்ஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் 30 ரன்கள் எடுத்திருந்த எட்வர்ட்ஸும் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. மெல்போர்ன் அணி தரப்பில் உஸாமா மிர் , ஹாரிஸ் ராவூஃப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.