Advertisement
Advertisement
Advertisement

பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!

மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 21, 2023 • 06:29 PM

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 21, 2023 • 06:29 PM

அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டிக் காக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ கிளர்க் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜேக் ஃபிரெசர் - மெக்கர்க் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜேக் அரைசதம் கடந்த நிலையில் ஒரு பவுண்டரி, 7 சிக்சர்கள் என 23 பந்துகளில் 55 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

Trending

பின்னர் களமிறங்கிய ஆரோன் ஃபிஞ்ச் 2 ரன்களுக்கும், சதர்லேண்ட் 12 ரன்களுக்கும், டாம் ரோஜர்ஸ் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெல்ஸ் 34 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் பால் வால்டர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கும் சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜோஷ் பிரௌன் 14, கேப்டன் காலின் முன்ரோ 12, நாதன் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ரென்ஷா - சாம் பில்லிங்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் பில்லிங்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 40 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிரங்கிய பால் வால்டர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ ரென்ஷா 49 ரன்களையும், பால் வால்டர் 2 பவுண்டரி, 3 சிச்கர்கள் என 30 ரன்களையும் விளாசினர். இப்போட்டியில் பேட்டின் மற்றும் பவுலிங்கில் கலக்கிய பால் வால்டர் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement