-mdl.jpg)
பிக் பேஷ் லீக்கின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மேத்யூ வேட் - கலெப் ஜெவெல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் வேட் 11 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஜெவெல் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய பென் மெக்டர்மோட் 11, சாம் ஹைன் 3, டிம் டேவிட் ஒரு ரன்னுக்கும, கோரி ஆண்டர்சன் 17, கிறிஸ் ஜோர்டான் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் டாம் கரண் 3 விக்கெட்டுகளையும், ஜாக் எட்வர்ட்ஸ், துவார்ஷூயிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.