ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சாம் ஹார்ப்பர் 5 ரன்களிலும், தாமஸ் ரோஜர்ஸ் 21 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி செர்ந்த வெப்ஸ்டர் - கிளென் மேக்ஸ்வெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மேக்ஸ்வெல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 9 ரன்களுக்கு, கார்ட்ரைட் 22 ரன்களிலும், மெர்லோ 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த வெப்ஸ்டரும் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிட்னி தண்டர் அணி தரப்பில் டேனியல் சம்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஸமான் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.