
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் மொல்போர்ன் ஸ்டிரைக்ர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் நிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் வெதார்லெட் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 11 ரன்களுக்கும், ஜேக் வெதர்லெட் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் 8 ரன்னுடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த டி ஆர்சி ஷார்ட் மற்றும் அலெக்ஸ் ரோஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் கோரை மளமளவென உயர்த்தினர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி ஆர்சி ஷார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பேஸ்லியும் 16 ரனனிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ரோஸூம் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.