14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹோபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் தொடக்க விரர் டி ஆர்சி ஷார்ட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வெதர்லெட்டும் 13 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கிறிஸ் லின் மற்றும் ஒல்லி போப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் லின் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 33 ரன்களை எடுத்த கையோடு ஒல்லி போப்பும் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ரோஸ் மற்றும் ஜேமி ஓவர்டன் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அலெக்ஸ் ரோஸ் 46 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ஜேமி ஓவர்டன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்களைக் குவித்தது. ஹோபர்ட் அணி தரப்பில் வக்கார் சலாம்கெயில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு மிட்செல் ஓவன் - மேத்யூ வேட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.