
BBL 2022: Daniel Sams stars as Thunder crush Renegades (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது போட்டியில் சிட்னி தண்டர் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தண்டர் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் - டேனியல் சாம்ஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவியது.
இதில் ஹேல்ஸ் 63 ரன்களில் ஆட்டமிழக்க, சாம்ஸ் 98 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தண்டர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைக் குவித்தது.