
உலக கிரிக்கெட்டில் ஆசிய அணிகளுக்கு மிக நெருக்கத்தில், தற்பொழுது ஆசிய கோப்பை இருக்கிறது. அதேபோல ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிக நெருக்கத்தில் இருக்கிறது. இந்த நிலையில் வங்கதேச அணியின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தமீம் இக்பால் திடீரென தனது ஓய்வு முடிவை நேற்று அறிவித்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். மேலும் அந்த அறிவிப்பின்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.
மிகப்பெரிய தொடர்கள் மிக நெருக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு மிக முக்கிய வீரர் ஓய்வு பெறுவது மட்டும் அல்லாமல் அவர் கேப்டனாகவும் இருப்பது வங்கதேச கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை இந்த நேரத்தில் உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. அவரது இந்த திடீர் முடிவுக்கு வங்கதேச கிரிக்கெட் சேர்மன் நஸ்முல் ஹசன்தான் காரணம் என்பது போலான பேச்சுகள் எல்லாம் எழுந்தது. தற்பொழுது அவர் ஒரு நீண்ட விளக்கத்தின் மூலம் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “இங்கு யூகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமில்லை. ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வைத்துக்கொண்டு நாங்கள் இப்படி எல்லாம் செயல்படுவோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த முடிவை அவர் எடுத்திருந்தாலும் கூட இது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு முடிவாக தான் நான் பார்க்கிறேன். அவரது ஓய்வுக்கு முக்கியமான காரணங்களாக சிலவைகள் இருக்கும். அது என்னவென்று நான் தெரிந்து கொள்வது நம் கிரிக்கெட் வாரியத்திற்கு நல்லது.