
ஆசிய கோப்பை தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வெளியேறிய இந்திய அணி, அடுத்ததாக டி20 உலகக்கோப்பைக்கு தயாராகவுள்ளது. அதன்படி இம்மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா படை மோதவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் தான் நடைபெறவுள்ளதால், அந்த அணியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்த அணியும் உலகக்கோப்பைக்கு தேர்வான வீரர்களுடன் தான் இந்தியாவுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இந்தியாவும் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்துக்கொண்டே தனது மொத்த பலத்தையும் இந்த தொடரில் களமிறக்குகிறது. அதாவது டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து முக்கிய வீரர்களும் இதில் விளையாடுகின்றனர். இதனால் டி20 உலகக்கோப்பைகான ப்ளேயிங் 11 விவரங்கள், இந்த தொடரில் இருந்தே தெரிந்துவிடும்.