Advertisement

ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் ராகுல், ஸ்ரேயாஸ், திலக்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 21, 2023 • 14:08 PM
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் ராகுல், ஸ்ரேயாஸ், திலக்!
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் ராகுல், ஸ்ரேயாஸ், திலக்! (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் விளையாட இருக்கிறது. வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாள், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.

ஏற்கனவே இந்தியா தவிர மற்ற அணிகள் தங்களது வீரர்களை அறிவித்த நிலையில், இந்தியா மட்டுமே வீரர்களை அறிவிக்காமல் இருந்தது. இதற்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது உடல் தகுதியை இந்திய அணி நம்பியிருந்தது. இருவரும் 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடி தங்களது உடல் தகுதியை நிரூபித்திருக்கின்றனர்.

Trending


இந்த நிலையில், இன்று டெல்லியில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் மீட்டிங் நடந்தது. இதையடுத்து, பிற்பகல் 1.30 மணிக்கு இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர, திலக் வர்மா, இஷான் கிஷான், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்கிறார். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் கூடுதல் வீரர் பட்டியளில் இந்திய அணியுடன் பயணிக்கவுள்ளது ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

*சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருக்கிறார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement