
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் விளையாடினாலும் சரி விளையாட விட்டாலும் சரி குறிப்பிட்ட வீரர்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்து கொள்ளும். அவர்களுக்கு போட்டி ஊதியத்தை சேர்க்காமல் ஆண்டு ஊதியம் என தனியாக வழங்கப்படும்.
இதில் ஏ + அதிகபட்சமாக 7 கோடி ரூபாயும், ஏ குரூப்பில் ஐந்து கோடி ரூபாயும், பி குரூப்பில் மூன்று கோடி ரூபாயும், சி பிரிவில் ஒரு கோடி ரூபாயும் சம்பளம் நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் ரவீந்திய ஜடேஜா வின் ஒப்பந்தம் ஏ+ பிரிவுக்கு உயர்த்தபட்டுள்ளார்.முன்னதாக ஏ பிரிவில் இருந்த ஜடேஜா, தற்போது ஏ+ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் கோலி ,ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆண்டு ஊதியம் 7 கோடி ரூபாய் ஆகும்.
இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சம்பளம் ஏ பிரிவிலிருந்து, பி பிரிவுக்கு அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளார். ஏ பிரிவில் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய ஊதியம் மூன்று கோடியாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பி பிரிவில் மூன்று கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த அக்சர் பட்டேலுக்கு தற்போது 5 கோடி ரூபாய் என ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.