தேர்வு குழு தலைவர் பதவிக்கு போட்டியிடும் சேவாக்?
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிகுமாறு விரேந்திர சேவாக்கிடம் பிசிசிஐ, கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக விண்டீஸ் அணியுடனான தொடரில் பங்கேற்க உள்ளது. அடுத்த சில தினங்களில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு இரண்டு முறை தகுதி பெற்ற இந்திய அணி, இரண்டு இறுதி போட்டிகளிலும் படுதோல்வியடைந்ததால், விண்டீஸ் அணியுடனான அடுத்த தொடரில் இருந்தே இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், புஜாரா, உமேஷ் யாதவ் போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும், 3 புதிய பேட்ஸ்மேன்களுக்கும், 3 புதிய பந்துவீச்சாளர்களுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Trending
இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வின்னப்பிக்குமாறு முன்னாள் வீரரான விரேந்திர சேவாக்கிடம் பிசிசிஐ, கோரிக்கை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிசிசிஐ வடக்கு மண்டலத்திலிருந்து ஒரு தேசிய தேர்வாளரைத் தேடிக் கொண்டிருக்கிறது, ஏனெனில் விதிகளின்படி, பிசிசிஐ 5 தேர்வாளர்களைக் கொண்ட குழுவைக் கொண்டுள்ளது. அதில் ஒருவர் தலைமை தேர்வாளராக நியமிக்கப்படுவார். தற்போது, ஷிவ் சுந்தர் தாஸ் இடைக்கால தலைமை தேர்வாளராக உள்ளார்.
விரைவில் புதிய தலைமை தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ள பிசிசிஐ வடக்கு மண்டலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளது. அந்த லிஸ்டில் வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் இருந்தாலும், சேவாக்கிற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now