தேர்வு குழு தலைவர் பதவியிலிருந்து விலகினார் சேத்தன் சர்மா!
இந்திய அணி தொடர்பான பல ரசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், தனது தேர்வு குழு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் ஏடாகூடமாக பேசி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மா சர்ச்சையில் சிக்கினார். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோருடன் கலந்து ஆலோசித்த அணியின் உள்விவகாரங்களை தேவையில்லாமல் வெளியிட்ட அவர், நிறைய வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இல்லாவிட்டாலும் கூட கிரிக்கெட் களத்திற்கு சீக்கிரம் திரும்புவதற்காக ஊசி போட்டுக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.
காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியதாகவும், ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதில் அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலிக்கு விருப்பமில்லை, ஆனால் அவருக்கு கோலியையும் பிடிக்கவில்லை என்றும் அம்பலப்படுத்தியுள்ளார்.
Trending
இப்படி அணியின் பல்வேறு விஷயங்களை கசியவிட்ட சேத்தன் ஷர்மாவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் தனது பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை ஜெய் ஷாவும் ஏற்றுள்ளார். இதன்மூலம் கூடிய விரையில் இந்திய அணியின் தேர்வு குழுவின் புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now