
BCCI extends jersey sponsorship with BYJU's by one year (Image Source: Google)
இந்திய அணியின் ஜெர்சிக்கு நீண்டகால ஸ்பான்ஸராக இருந்தது சஹாரா. அதன்பின்னர் 2017 மார்ச் வரை ஸ்டார் நிறுவனம் ஸ்பான்ஸராக இருந்தது. 2017 மார்ச்சில் ஸ்டாரிடமிருந்து சீன மொபைல் நிறுவனமான ஓப்போ ஜெர்சி ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியிருந்தது.
2019 செப்டம்பரில் இருந்து பைஜூஸ் கற்றல் செயலி நிறுவனம் ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியது. 2022ம் ஆண்டு(நடப்பாண்டு) மார்ச் வரை பைஜூஸ் நிறுவனத்திற்கு ஸ்பான்ஸர்ஷிப் வழங்கப்பட்டது.
பைஜூஸின் ஸ்பான்ஸர்ஷிப் காலம் முடியவுள்ள நிலையில், மேலும் ஓராண்டுக்கு, அதாவது 2023ம் ஆண்டு மார்ச் வரை பைஜூஸையே ஜெர்சி ஸ்பான்ஸராக நீட்டித்துள்ளது பிசிசிஐ.