Advertisement

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை - பிசிசிஐ!

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 30, 2022 • 11:32 AM
 BCCI has no plans of India-Pakistan Test series anywhere, says report
BCCI has no plans of India-Pakistan Test series anywhere, says report (Image Source: Google)
Advertisement

இந்திய - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் 2007-க்குப் பிறகு விளையாடவில்லை. ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போன்ற நிகழ்வுகள் தவிர இரு அணிகளும் தனிப்பட்ட தொடர்களில் ஒருவரையொருவர் எதிர்த்து ஆடவில்லை. 

இப்போது டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் த்ரில் போட்டியை சுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுக் களித்ததையடுத்து இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை மெல்போர்னில் நடத்தலாம் என்றும் இதற்கு இந்திய - பாகிஸ்தான் வாரியங்கள் ஒப்புக்கொண்டால் சிறப்பாக நடத்தி முடிக்கலாம் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆர்வம் காட்டி வருகிறது.

Trending


உலகின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் பிரதானமான மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டியை நடத்தி பார்க்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று முடிந்த 2ஆவது டெஸ்ட் போட்டியின்போது மெல்போர்ன் மைதானத்தை நிர்வகிக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டூவர்ட் ஃபாக்ஸ், இது குறித்து தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும் போது, எதிர் காலத்தில் அல்லது எந்த நாட்டிலும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்காக திட்டங்கள் எதுவும் இல்லை. யாருக்காவது அத்தகைய விருப்பம் இருந்தால் அதை அவர்களே வைத்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement