
BCCI have announced Team India’s squad for the T20I Series against Ireland! (Image Source: Google)
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஜூன் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. இந்த போட்டிகள் வரும் ஜுன் 26ஆம் தேதி மற்றும் ஜூன் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதால், அயர்லாந்து தொடருக்கு புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அணியின் துணைக் கேப்டனாக புவனேஷ்வர் குமார் செயல்படவுள்ளார். அவரின் தலைமையில் 17 பேர் கொண்ட அணி உருவாக்கப்பட்டுள்ளது.