டிசம்பரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்!
வரும் டிசம்பர் மாதம் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இந்தியா, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன் பிறகு ஆசிய கோப்பை 2023 மற்றும் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. அதன் பிறகு ஆஸ்திரேலியா டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் செஞ்சூரியனில் பாக்ஷிங் டே டெஸ்ட் போட்டி மற்றும் கேப்டவுனில் டெஸ்ட் உள்பட 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும்.
Trending
இந்த டி20 போட்டியானது, டர்பன், குகெபர்ஹா மற்றும் ஜோஹன்னஸ்பர்க் ஆகிய பகுதிகளில் நடக்கிறது. முதல் 2 போட்டியானது குகெபர்ஹாவிலும், ஜோகன்னஸ்பர்க்கில் 3ஆவது டி20 போட்டி நடக்கிறது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்:
டி20 தொடர்:
- டிசம்பர் 10 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – முதல் டி20 - டர்பன்
- டிசம்பர் 12 - இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 2ஆவது டி20 - குகெபர்ஹா
- டிசம்பர் 14 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 3 ஆவது டி20 – ஜோஹன்னஸ்பர்க்
ஒரு நாள் கிரிக்கெட் தொடர்:
- டிசம்பர் 17 - இந்தியா – தென் ஆப்பிரிக்கா – முதல் ஒரு நாள் கிரிக்கெட் – ஜோஹன்னஸ்பர்க்
- டிசம்பர் 19 - இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் – குகெபர்ஹா
- டிசம்பர் 21 - இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் – பார்ல்
டெஸ்ட் தொடர்:
- டிசம்பர் 26 – டிசம்பர் 30 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – முதல் டெஸ்ட், செஞ்சூரியன்
- ஜனவரி 03 – ஜனவரி 07 - இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 2ஆவது டெஸ்ட், கேப்டவுன்
Win Big, Make Your Cricket Tales Now