
ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்தியன் பிரீமியர் லீன் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரை பிசிசிஐ அறிமுகம் செய்தது. இதுவரை ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் இந்த ஆண்டு முதல் முறையாக மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 17 ஆம் தேதி மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருக்கிறது.
இதில், பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகளை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பையில் நடைபெற்றது. மும்பையில் நடந்த இந்த ஏலத்தில் மொத்தமாக 7 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் உள்பட அதானி குரூப், கேப்ரி குளோபல், அப்போலோ பைப்ஸ், அமித் லீலா எண்டர்பிரைசஸ், ஸ்ரீராம் குரூப், ஹல்டிராம்ஸ் குரூ, டோரண்ட் பார்மா, ஸ்லிங்ஷாட் 369 வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டே நிறுவனம் உள்பட மொத்தமாக 17 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்நிலையொல் மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளை வாங்கிய நிறுவனங்களை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி இந்த ஏலம் 4,669.99 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் அகமதாபாத் அணியை அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் ரூ.1,289 கோடிக்கும், மும்பை அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடேட்(Indiawin Sports) அணி 912.99 கோடிக்கும் வாங்கியுள்ளது.