
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி, தன்னுடைய 50ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் அவருடைய உற்ற நண்பரான சச்சின் டெண்டுல்கரும் பங்கேற்றார். தற்போது இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
தற்போது கங்குலி, சச்சின், தோனி ஆகியோர் இங்கிலாந்தில் விடுமுறையில் உள்ளனர். இந்த நிலையில், தனியார் பத்திரிக்கைக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “பிசிசிஐயில் தாம் தலைவராக இருந்த 3 வருடம் பொற்காலமாக இருந்தது. இதில் இரண்டு ஆண்கள் கோவிட் காலம் வேறு. கிரிக்கெட், பிசிசிஐ பொருளாதாரம் என அனைத்திலும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். என் பதவிக்காலத்தில் எந்த சர்ச்சையும் நடைபெறவில்லை. ஐபிஎல் மூலம் பிசிசிஐ பெரிய பொருளாதார உச்சத்தை பெற்றுள்ளது. தற்போது ஐபிஎல் மூலம் 48 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.