டி20 உலகக்கோப்பை: ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டது பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியுடைய ஜெர்சி பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ என்று பதிவிட்டு பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீகம் மற்றும் ஓமனில் 7ஆவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியையே பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதாலும் பெரும் எதிர்பார்ப்புகள் நிழவி வருகின்றன.
Trending
இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் இந்திய அணியுடைய ஜெர்சி பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ என்று பதிவிட்டு பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டுள்ளது.
பிசிசிஐயின் ட்விட்டர் பதிவில், “பில்லியன் சியர்ஸ் ஜெர்சி, ஜெர்சியின் வடிவங்கள் ரசிகர்களின் பில்லியன் ஆரவாரத்தால் ஈர்க்கப்பட்டவை” என்று பதிவிட்டுள்ளது.
Presenting the Billion Cheers Jersey!
— BCCI (@BCCI) October 13, 2021
The patterns on the jersey are inspired by the billion cheers of the fans.
Get ready to #ShowYourGame @mpl_sport.
Buy your jersey now on https://t.co/u3GYA2wIg1#MPLSports #BillionCheersJersey pic.twitter.com/XWbZhgjBd2
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மேலும் நேவி புளு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்திய அணியின் இந்த புதிய ஜெர்சி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now