டி20 உலகக்கோப்பை: இறுதி போட்டியில் மோதும் அணிகள் குறித்து சேவாக் கருத்து!
டி20 உலக கோப்பையில் எந்த 2 அணிகள் இறுதிப்போட்டியில் மோதும், அதில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று தகுதிச்சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடையும் வேளையில் நாளை அக்டோபர் 22ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன. முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கும் வேளையில் அடுத்ததாக அக்டோபர் 23ஆஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது.
இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணியை பாகிஸ்தான அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் அந்த படுதோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இம்முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அவர்களுக்கு பயம் காட்ட காத்திருக்கிறது.
Trending
இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணியாக காணப்படுவதால் நிச்சயம் இந்த போட்டியில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போவது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தான் என்று வெளிப்படையாக தனது கருத்தினை அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “இம்முறை இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் தான் அதிக ரன்கள் அடிப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரது பேட்டிங் தற்போது மிகச் சிறப்பான வகையில் இருக்கிறது. அவர் விளையாடும் விதத்தை பார்க்கும் போது மிகவும் சுதந்திரமாகவும், தனது ஆட்டத்தை ரசித்தும் விளையாடுகிறார். எனவே நிச்சயம் அவரால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக அளவிலான ரன்களை குவிக்க முடியும்.
அதேபோல் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தான் ஃபைனலில் மோதும். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகக்கடினம். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடிய நல்ல அனுபவம் கொண்ட மற்றும் பேலன்ஸான அணி” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now