
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த சிஸ்கே அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது. இதில் டெவான் கான்வே ஆட்டம் இழக்காமல் 52 பந்தில் 92 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு களமிறங்கிய எல்லா பேட்ஸ்மேன்களும் சரியான பங்கை செய்து கொண்டே வந்தார்கள். ஆனாலும் ஆட்டம் ஒரு மாதிரி சென்னை பக்கமே இருந்தது. இந்த நிலையில் துஷார் வீசிய 17ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை அடித்து லிவிங்ஸ்டன் ஆட்டம் இழக்க ஆட்டம் பஞ்சாப் பக்கம் வந்தது.
ஆனாலும் கடைசி ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய பதிரனா கடைசிப் பந்து வரை ஆட்டத்தை இழுத்துச் சென்றார். ஆனாலும் கடைசிப் பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட சிக்கந்தர் ராஸா எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசிப் பந்தில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றிபெற்றது.