1-mdl.jpg)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று சென்சூரியன் நகரில் தொடங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதற்காக களமிறங்க உள்ள 11 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் அதில் ஒரே ஒரு ஸ்பின்னர் மட்டுமே விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
அது போன்ற சூழ்நிலையில் அஸ்வினை விட சற்று பேட்ட்டிங்கில் அதிகமாக ரன்கள் சேர்க்கக்கூடிய ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் ரவிச்சந்திரன் அஷ்வினை கழற்றி விட்ட இந்திய அணி நிர்வாகம் இப்போட்டியில் மீண்டும் அதை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.