இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்: மோர்னே மோர்கல்
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதும் எனக்கு மிகவும் சிறப்பு வய்ந்த தருணம் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியானது வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27ஆம் தேதி கன்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேற்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 06ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது.
Trending
முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவானது கடந்த மாதம் மாற்றப்பட்டது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டும் செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மட்டும் நியமிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இலங்கை தொடரின் போதே அவர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொந்த காரணங்களால் அவரால் அணியின் பயிற்சியாளராக செயல்பட முடியவில்லை. இதையடுத்து அவர் தற்சமயம் இந்திய அணியுடன் இணைந்து தனது பொறுப்பை நிர்வகித்து வருகிறார்.
அதன்படி இந்திய அணி சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவி குறித்து மோர்னே மோர்க்கல் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து நான் அறிந்ததும், என்னுடைய அறையில் சுமார் ஐந்து நிமிடத்திற்கு மேலாக நான அது குறித்து யோசித்தேன். பிறகு இதுகுறித்து முதலில் என் அப்பாவுக்கு போன் செய்து பேசினேன்.
அதேசமயம் நான் இந்திய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டது குறித்து என் மனைவியிடம் கூட செல்லவில்லை. உங்களுக்கு தெரியும், பொதுவாக ஆண்கள் முதலில் எந்த விசயமென்றாலும் அதனை மனைவியிடம் தான் சொல்வார்கள், ஆனால் நான் என் அப்பாவிடம் தான் முதலில் இதுகுறித்து பேசினேன், அதாவது, பல ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகனாக இருந்து, என்ன வரப்போகிறது என்பதை அறிந்த எனக்கு இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமான நான் பார்க்கிறேன்.
நான் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை அதை ரசித்தேன், பின்னர் இது ஒரு வாய்ப்பு என்றும் அது நடக்கக்கூடும் என்றும் வெளிப்படையாக குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டேன். இந்த பதவில் நான் நியமிக்கப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது அதனையெல்லாம் நான் கடந்துவிட்டு, இங்கே அணி வீரர்களுடன் இணைந்து எனது பணியைச் செய்து வருகிறேன்.
இந்திய அணி வீரர்களுடன் நான் நால்ல தொடர்பில் இருப்பது மட்டுமே எனக்கு முக்கியம். மேலும் இங்குள்ள சில வீரர்களுக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன். மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடிய சில வீரர்களை நான் இந்த அணியில் சந்தித்துள்ளேன். அதனால் மற்ற வீரர்களுடனும் நான் கூடிய விரையில் நட்பை உருவாக்கிகொள்வேன். ஏனெனில் என்னைப் பொறுத்தவரையில் அதுதான் மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்க அணிக்காக 2006 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை விளையாடி அவர் 86 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 44 டி20 போட்டிகள் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். தனது ஓய்வு பிறகு அவர் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும், எஸ்ஏ20 லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now