Advertisement

இது எளிதான ஆட்டமாக இருக்காது - ஜிம்பாப்வேவை எச்சரிக்கும் பென் கரண்!

இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி நிச்சயம் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதல், இது எளிதான ஆட்டமாக இருக்கது என்று ஜிம்பாப்வே அணி வீரர் பென் கரண் தெரிவித்துள்ளார்.

Advertisement
இது எளிதான ஆட்டமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை
இது எளிதான ஆட்டமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 26, 2025 • 09:36 PM

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 26, 2025 • 09:36 PM

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஏப்ரல் 28ஆம் தேதி சிட்டாகாங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வங்கதேச அணி தோல்வியைத் தழுவினாலோ அல்லது போட்டியை டிரா செய்தாலோ தொடரை இழக்கும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் ஜிம்பாப்வே அணி இப்போட்டியை டிரா செய்தலே தொடரை வெல்லும் வாய்ப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. 

Also Read

இதனால் இப்போட்டியில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன் பேசியுள்ள ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் பென் கரண், “இப்போட்டியில் வங்கதேச அணி நிச்சயம் எங்களை கடுமையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் இது எளிதான ஆட்டமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

ஒவ்வொரு கணமும் நாங்கள் கடினமாக உழைக்க வேண்டும். கடந்த ஆட்டத்தைப் போலவே நாங்கள் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறேன்.  டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது எப்போதும் வீரர்களுக்கு நம்பிக்கையைத் தரும். சில்ஹெட்டில் கிடைத்த வெற்றியிலிருந்து அனைவரும் வித்தியாசமான பாடங்களைக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள். தனிநபர்களாக முன்னேற நாம் தயாராக இருக்கும் வரை, நாம் ஒரு நல்ல இடத்தில் இருப்போம்.

மேலும் நான் சர்வதேச கிரிக்கெட்டுடன் ஒப்பீட்டளவில் நான் அறிமுக வீரர் தன். அதனால் இந்த அணியின் மூத்த வீரர்களான சீன் வில்லியம்ஸ் மற்றும் கிரேய்க் எர்வின் ஆகியோரிடமிருந்து என்னால் முடிந்தவரை அனைத்தையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். அது என் வளர்ச்சிக்கு உதவும். நான் அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்றால் நான் முட்டாள்தனமாக இருப்பேன் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். 

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், முஷ்ஃபிகூர் ரஹீம், மஹிதுல் இஸ்லாம் அன்கான், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது, தன்சிம் ஹசன் சாகிப்

Also Read: LIVE Cricket Score

ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின் (கே), பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், பென் கரன், ட்ரெவர் குவாண்டு, வெஸ்லி மாதேவெரே, வெலிங்டன் மசகட்சா, வின்சென்ட் மசெகேசா, நியாஷா மாயாவோ, ஆசிர்வாதம் முசரபானி, ரிச்சர்ட் ந்ங்கராவா, விக்டர் நியுச்சி, தஃபட்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement