
Ben Duckett WTC Record: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியஷிப் தொடரில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் இந்த அணி நிர்ணயித்துள்ள 371 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது 5ஆம் நாள் தேநீர் இடைவேளையின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை எடுத்துள்ளது.
அந்த அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதுடன் 21 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 149 ரன்களையும், ஸாக் கிரௌலி 65 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஒல்லி போப், ஹாரி புரூக் ஆகியோர் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனையடுத்து அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் விக்கெட்டை இழக்காமல் களத்தில் உள்ளனர்.