ஐபிஎல் 2021: கிறிஸ் வோக்ஸிற்கான மாற்று வீரரை அறிவித்தது டெல்லி!
ஐபிஎல் இரண்டாம் பாதியிலிருந்து விலகிய கிறிஸ் வோக்ஸிற்கு பதிலாக, ஆஸ்திரேலியாவின் பென் துவார்ஷூயிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி தொடர் அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடக்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாம் பாதி ஐபிஎல் சீசனிலிருந்து இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள் பலர் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தனர். இதனால் அவர்களுக்கு மாற்று வீரர்களைத் தேடிம் பணியில் அணிகள் இறங்கியுள்ளன.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் விலகியதையடுத்து, அவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியாவின் பென் துவார்ஷூயிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
பிக் பேஷ் தொடரின் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிவரும் பென் துவார்ஷூயிஸ், பிபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆறாவது வீரராகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now