
Ben Stokes All Set To Get Back On Cricket Field Next Week (Image Source: Google)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கும் மிக முக்கிய காரணமாக அமைந்தவர்.
இந்நிலையில் இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது கே.எல்.ராகுல் அடித்த கெட்சைப் பிடித்த பென் ஸ்டோக்ஸுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இங்கிலாந்து திரும்பினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இவரது காயம் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டோக்ஸ் விலகினார்.