டி20 உலகக்கோப்பையிலிருந்தும் விலகும் பென் ஸ்டோக்ஸ்?
இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இளம் இங்கிலாந்து அணியை வழிநடத்தி, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றினார்.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வெல்ல மிக முக்கிய காரணமாகவும், ஆஷஸ் தொடர் வெற்றி நாயகனாகவும் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கலவரையின்றி ஓய்வெடுக்கவுள்ளதாக ஸ்டோக்ஸ் சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்தும் பென் ஸ்டோக்ஸ் விலகினார். அதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதிலும் அவர் விலகியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்தும் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்டோக்ஸிற்கு நெருக்கமானவர்கள் கூறுகையில் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதிலும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவடு குறித்து எதனையும் தெரியபடுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதனால் பென் ஸ்டோக்ஸ் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now