ஐபிஎல் 2023: சிஎஸ்கே பயிற்சியில் இணைந்த ஸ்டோக்ஸ், மொயீன் அலி!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி இருவரும் இன்று இந்தியா வந்தடைந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் போட்டிகள் வருகின்ற 31ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே மீதம் இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் முழு வீச்சில் தயாராக துவங்கி விட்டனர். இதற்காக உலகெங்கிலும் இருந்து ஐபிஎல் அணியில் விளையாடக்கூடிய வீரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடுகிறார்கள்.
Trending
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் என பிற நாடுகளில் இருந்து வீரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ். மற்றும் மொயின் அலி ஆகியோர் இன்று சென்னை வந்தடைந்தனர்.
மொயின் அலி 2021 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் . இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனும் ஆல் ரவுண்டர்மான பென் ஸ்டோக்ஸ். இந்த வருட ஏலத்தில் சிஎஸ்கே அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் ஆவார். இவரை சிஎஸ்கே அணி 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ஸ் அணிக்காக பென் ஸ்டோக்ஸ். எம் எஸ் தோனி தலைமையில் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . 2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் இன் போது ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறினார். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இவர் பங்கேற்கவில்லை. இந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார்.
The superstars descent from the morning! #WhistlePodu #Yellove @benstokes38 pic.twitter.com/Ct7DLovG4z
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2023
இதுவரை 43 ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கும் பென்ஸ் ஸ்டோக்ஸ் 920 ரன்கள் எடுத்திருக்கிறார் இதில் இரண்டு சதங்கள் அடங்கும். மேலும் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ். இவர் இன்று சென்னை அணியுடன் இணைந்த காணொளியை சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் நிர்வாகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now