காயத்திலிருந்து மீண்ட பென் ஸ்டோக்ஸ்; டி20 பிளாஸ்டில் அசத்தல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், காயத்திலிருந்து மீண்டு கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது காயமடைந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எழும்புமுறிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்திலுள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரது காயம் குணமடையாததால், அவர் நியூசிலாந்து, இலங்கை அணிக்கெதிரான இங்கிலாந்து அணியிலும் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடரான டி20 பிளாஸ்ட் லீக் போட்டியில் டர்ஹாம் அணிக்காக நேற்று களமிறங்கினார்.
இப்போட்டியில் 18 பந்துகளை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ் 4 பவுண்டரி ஒரு சிக்சர் என 29 ரன்களைச் சேர்த்து அசத்தினார். மேலும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இதன் மூலம் டர்ஹாம் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பர்மிங்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now