
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்தவகையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக மெய்நிகர் விழாவாக நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இந்த ஆண்டு சிட்னியில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும், வீராங்கனைகள் அலிசா ஹீலி, எல்லிஸ் பெர்ரி ஆகியோரும் முக்கிய விருதுகளை வென்றனர்.
அதன்படி, ஆலன் பார்டர் விருதை ஸ்டீவ் ஸ்மித்து, பெலிண்டா கிராளர்க் விருதை பெத் மூனியும், ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஷேன் வார்ன் விருதை உஸ்மான் கவாஜாவும், சிறந்த ஒருநாள் வீரர் விருதை டேவிட் வார்னரும் கைப்பற்றினர். அதேபோல் இளம் கிரிக்கெட்டருக்கான பிராட்மேன் விருதை லான்ஸ் மோரிஸ் வென்றுள்ளார்.