
பிசிசிஐ சாா்பில் 5 மகளிா் அணிகள் பங்கேற்கும் மகளிர் ப்ரீமியா் லீக் டி20 லீக் தொடா் இன்று கோலாகலமாக மும்பையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்று ஆடுவதால் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது டபிள்யுபிஎல்.
பல்வேறு ஆண்டுகள் திட்டமிடல், நடவடிக்கைக்கு பின் இந்தியாவில் மகளிா் கிரிக்கெட்டுக்கு மேலும் உத்வேகம் தரும் வகையில் டபிள்யுபிஎல் லீக் தொடா் நடத்தப்படுகிறது. முதல் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு, டில்லி கேபிடல்ஸ், யுபி வாரியா்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்திய அணியின் கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் கேப்டனமாக நியமிக்கப்பட்டுள்ளாா். நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பெங்களூரு அணிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும், மற்றொரு ஆஸி வீராங்கனை பெத்மூனி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கும், ஆஸி. விக்கெட் கீப்பா் அலிஸா ஹீலி யுபி வாரியா்ஸ் அணிக்கும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.