BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் அறிவித்தது.
Trending
இதில் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியதாக அறிவிக்கப்பட்டதுடன், அவருக்கான மாற்று வீரராகவும் எந்த வீரரையும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது.
Scott Boland Replaces Injured Josh Hazlewood In Australia's XI!#AUSvIND pic.twitter.com/43e8kNFhOC
— CRICKETNMORE (@cricketnmore) December 5, 2024
இதில் ஹேசில்வுட் இல்லாத காரணத்தால் அவரது இடத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மிட்செல் மார்ஷும் தனது இடத்தை பிடித்துள்ளார். மேற்கொண்டு மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா உள்ளிட்டோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
Win Big, Make Your Cricket Tales Now