
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் இந்திய அணியானது ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் விளையாடி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதனால் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரும் இப்போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.