
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக கருதப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் சமீப காலங்களில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அதிலும் குறிப்பாக நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தார். இதன் காரணமாக 2014ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் டாப் 10 இடத்தை இழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
End is near #SteveSmith #Australia #AUSvIND #Cricket pic.twitter.com/kEyTNx2j1J
— CRICKETNMORE (@cricketnmore) December 11, 2024