புவனேஷ்குமார் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது - ரோஹித் சர்மா!
புவனேஸ்வர் குமார் நெருக்கடியான நேரத்தில் 19ஆவது ஓவரை சிறப்பாக வீசினார். அவரது அனுபவம் கைகொடுத்தது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2ஆவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. கொல்கத்தாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது.
ரிஷப்பண்ட் 28 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) , விராட் கோலி 41 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி 1 சிக்சர்), வெங்கடேஷ் அய்யர் 18 பந்தில் 33 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
Trending
பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோவ்மன் பாவெல் 36 பந்தில் 68 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 41 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஸ்வர் குமார், யசுவேந்திர சாஹல், பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசியர் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்களுக்கு எதிராக விளையாடும்போது எப்போதுமே சிறிது பயம் ஏற்படும். இறுதியில் வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்தது மகிழ்ச்சியானது. இது எளிதானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும்.
புவனேஸ்வர் குமார் நெருக்கடியான நேரத்தில் 19ஆவது ஓவரை சிறப்பாக வீசினார். அவரது அனுபவம் கைகொடுத்தது. பல ஆண்டுகளாக நாங்கள் அவரை மிகவும் நம்புகிறோம். எப்போதுமே 19ஆவது ஓவரில் அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
விராட் கோலியின் ஆட்டம் முக்கியமானது. ரிஷப் பந்தும், வெங்கடேஷ் ஐயரும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் ஆட்டத்தில் முதிர்ச்சி இருப்பதை பார்க்க முடிகிறது. சில கேட்ச்களை தவறவிட்டது ஏமாற்றத்தை அளித்தது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now