6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை மாலை துபாயில் நடைபெறவுள்ளது.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. எனவே இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இதற்காக மிகவும் பலமான ப்ளேயிங் 11-ஐ உருவாக்க நீண்ட ஆலோசனை நடைபெற்று வருகின்றன. ரசிகர்களும் தங்களது அலோசனைகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் இந்திய அணியின் பிளேயிங் 11-ஐ கணித்துள்ளார். இதில் பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரோ ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என வாசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.