
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் 25ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக சிறந்த மிடில் ஆர்டர் பேட்மேனாகவும் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வந்த ரஹானே 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் இந்தியாவை அபாரமாக வழி நடத்தி 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அந்த தொடருக்கு பின் சதமடிக்க முடியாமல் தடுமாறிய அவர் கடந்த 2022 பிப்ரவரியில் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அப்போது மனம் தளராமல் ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து போராடிய அவர் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அபாரமாக செயல்பட்டார். அதன் காரணமாக கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.