Advertisement

இனி ஓவருக்கு இரண்டு பவுன்சர்; அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் அமல்!

ஐபிஎல் 17ஆவது சீசன் முதல் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 19, 2023 • 11:14 AM
இனி ஓவருக்கு இரண்டு பவுன்சர்; அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் அமல்!
இனி ஓவருக்கு இரண்டு பவுன்சர்; அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் அமல்! (Image Source: Google)
Advertisement

உலகளவில் அதிக வருமானம் தரக்கூடிய கிரிக்கெட் லீக் தொடர்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முதலிடம் வகிக்கின்றது. இந்த தொடருக்காக கிட்டத்தட்ட 2 மாதங்கள் எந்தநாட்டு கிரிக்கெட் வாரியமும் சர்வதேச தொடர்களை அதிகமாக வைத்துக் கொள்வதில்லை.

இதில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.

Trending


இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளுக்கும் பொருந்தும். இதனால் கடந்த சீசனில் ஆல்ரவுண்டர்களுக்கான பங்களிப்பு குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இம்பேக்ட் ப்ளேயர் விதியை நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் பந்து வீசலாம் என்கின்ற நிலையில், இரண்டு பவுன்சர் பந்துகள் வீசலாம் என்று விதி மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த விதி அடுத்த வருடம் நடக்கும் ஐபிஎல் தொடரில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வருடம் சையத் முஷ்டாக் அலி தொடரில் இந்த விதி பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விதி மாற்றம் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் கூறும் பொழுது “ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் என்பது மிகவும் பயனுள்ளதாக நான் உணர்கிறேன். பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு சில சாதகங்களை வழங்கும் விதிகளில் இதுவும் ஒன்று.

ஏனென்றால் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் என்றால், நான் ஆரம்பத்திலேயே ஒரு பவுன்சர் வீசி விட்டால், அதற்கு மேல் பவுன்சர் வீசமாட்டேன் என்று பேட்ஸ்மேன் மிகவும் தயாராக இருப்பார். ஆனால் இப்போது அப்படி இருக்க முடியாது. இந்த சிறிய மாற்றம் பெரிய தாக்கத்தை உருவாக்கக் கூடியதாக அமையப்போகிறது!” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement