
தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டது. கேப்டன் கோலி முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை, 2ஆவது டெஸ்ட்டில் விளையாடினார். புஜாரா, ரஹானே இருவரும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் பெரிதாக ரன் ஸ்கோர் செய்யவில்லை. பேட்டிங்கிலும் ஃபார்மில் இல்லை. இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் நீக்கப்படலாம் என்பதை திராவிட் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சதம், அக்ஸர் படேல் பந்துவீச்சு பேட்டிங்கிலும் தன்னை நிரூபித்தது, ஜெயந்த் யாதவின் பந்துவீச்சு, மயங்க் அகர்வால் மீண்டும் ஃபார்முக்கு வந்தது போன்ற இளம் வீரர்களின் செயல்பாடு அதிகமாக அணி நிர்வாகத்தை ஈர்த்துள்ளது. அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல திராவிட் தலைமையில் இளம் வீரர்களுக்கு அதிகமான முன்னுரிமை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பேசிய டிராவிட், ''எங்களுக்குத் தேர்வுக் குழுவில் “நல்ல தலைவலி” காத்திருக்கிறது. யாரை அணியில் தக்கவைப்பது, நீக்குவது என்ற கடினமான முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். சிறப்பாகச் செயல்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காக ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி நடக்கிறது.