
அமெரிக்காவில் இந்த வருடம் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்களைச் சேர்த்தார். டெக்ஸாஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்டு கோட்ஸி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர்கள், டேவான் கான்வே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க மறுபுறம் தடுமாறிய கேப்டன் டு பிளேஸிஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை விட அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் 14, மிலிந்த் குமார் 3, லஹிரு மிலாந்தா 15, மிட்சேல் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் வாஷிங்டன் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.