
Australia Test Team: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பிராண்டன் டெக்கெட் காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சுழற்ச்சிகான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து அந்த அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணிகளுமே சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ஜூன் 25ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் பிராண்டன் டெக்கெட் காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்.