இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லம் நியமனம்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் பிராண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியள்ளது. அதன்படி இலங்கை அணியின் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து அணியின் ஈயன் மோர்கன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இந்தியாவின் ராகுல் டிராவிட் என பல்வேறு ஜாம்பவான்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியன.
Trending
இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தின் பிராண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிராண்டன் மெக்கல்லம் தற்போது இங்கிலாந்து அணியின் அனைத்து வடிவ ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 2027ஆம் ஆண்டு வரை அவர் இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Meet England's New White Ball Head Coach!!
— CRICKETNMORE (@cricketnmore) September 3, 2024
Brendon McCullum Announced As England Men's White-Ball Coach #CricketTwitter #England #BrendonMcCullum #JosButtler #ChampionsTrophy pic.twitter.com/YHWTQh74K3
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள பிராண்டன் மெக்கல்லம், டெஸ்ட் அணியுடன் எனது நேரத்தை நான் முழுமையாக அனுபவித்து மகிழ்ந்தேன், மேலும் தற்போது ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் புதிய சவாலை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன், மேலும் ஜோஸ் பட்லர் மற்றும் குழுவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அடுத்த ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தொடர் முதல் பிரண்டன் மெக்கல்லம் தனது பயிற்சியாளர் பதவியை தொடரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now