
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலமுறை கோப்பைகளை வென்று வெற்றிகரமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் செயல்பட்டு வந்தாலும், இவர்களை விட அதிக அளவில் ரசிகர்கள் இருப்பது ஆர்சிபி அணிக்குதான். இதற்கு முழு முக்கிய காரணமாக ஜாம்பவான் பவுலர் பிரட் லீ குறிப்பிடுவது, 15 வருடங்களாக கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும் ஒவ்வொரு சீசனிலும் தங்களுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.
எதைப்பற்றியும் கவலை கொள்ளாது. தில்லானா ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளனர். என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசினார். மேலும், ஆர்சிபி அணிக்கு விராட் கோலி, டி வில்லியர்ஸ், அணில் கும்ப்ளே, டேல் ஸ்டெய்ன், கிறிஸ் கேயில் போன்ற ஆட்டத்தில் ஆக்ரோஷமிக்க வீரர்களும் விளையாடி உள்ளனர். தலைசிறந்த அணியை மட்டுமில்லாது சிறந்த ரசிகர்களையும் ஆர்சிபி அணி கொண்டிருக்கிறது என்றும் பிரட் லீ கூறினார்.
இதுகுறித்து பேசிய அவர், “என்னை பொருத்தவரை, ஆர்சிபி அணி என்றாலே குழந்தைகள் கூட விரும்பி விளையாட நினைக்கும் மற்றும் கவனிக்கும் ஒரு அணியாகும். ஒவ்வொரு போட்டியிலும் தங்களுடைய நூறு சதவீதம் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆட்டம் வெற்றி தோல்வியில் முடிவடைகிறது என்பதை அவர்கள் கவலைப்படுவதில்லை. இதனால்தான் அவர்களுக்கு அதிக அளவில் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.